இன்று முழு சூரிய கிரகணம்:

Estimated read time 1 min read

இன்று 2024ஆம் ஆண்டின் முழு சூரிய கிரகணம் நடைபெறவுள்ளது. எனினும் இது இந்திய துணைக்கண்டத்திலிருந்து பார்க்க முடியாது.
ஏனெனில் இந்தியா, சூரிய கிரகணம் நடைபெறும் பாதைக்கு வெளியே அமைந்துள்ளது.
ஆனால் இந்தியாவில் உள்ள ஆர்வலர்கள், இந்த விண்ணுலக நிகழ்வை இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு, நாசாவின் நேரடி ஸ்ட்ரீமில் காணலாம்.
இந்த கிரகணத்தை கிட்டத்தட்ட 31.6 மில்லியன் மக்கள் கண்டுகளிப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கிரகணம், திங்கட்கிழமை 11.57 ISTக்கு அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் தொடங்கி, செவ்வாய்கிழமை அதிகாலை 1.05 மணிக்கு மைனேயில் முடிவடையுமென கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் பாதை, அமெரிக்காவின் ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ், மிசோரி, இல்லினாய்ஸ், கென்டக்கி, இந்தியானா, ஓஹியோ, பென்சில்வேனியா, நியூயார்க், வெர்மான்ட் மற்றும் நியூ ஹாம்ப்ஷயர் நகரங்களாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author