நீரிழிவு நோயாளிகளுக்கு குட் நியூஸ்….!!!

Estimated read time 0 min read

ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஏற்படும் ஒரு 1.6 மில்லியன் இழப்புகளில் நேரடி காரணமான நீரிழிவு நோய்தான் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டுள்ளது.

மேலும் உலகின் பெரிய கொலையாளி என்ற பட்டியலில் 7வது இடத்தில் நீரழிவு நோய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நீரழிவுக்கான சிகிச்சை எடுக்காமல் விடும்போது இதயம், இரத்தக் குழாய்கள் மற்றும் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.

விழிப்புணர்வு குறைவாக இருப்பது நோய்களை தடுக்க முடியாத நிலை உண்டாகிறது. நீரழிவு நோயாளிகள் உணவில் அதிக கவனம் கொள்ள வேண்டும்.

இந்நிலையில் கனேடிய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஒரு முன்மாதிரி சாதனத்தைப் பயன்படுத்தி நீரிழிவு பரிசோதனையை எளிதாகச் செய்யலாம்.

இக்கருவியின் மூலம், உமிழ்நீர் மாதிரிகள் மூலம் இரத்த குளுக்கோஸ் அளவை வீட்டிலேயே அளவிட முடியும். ஒரு நபரின் உமிழ்நீரில் உள்ள குளுக்கோஸின் அளவு அவர்களின் இரத்த ஓட்டத்திற்கு விகிதாசாரமாகும்.

உமிழ்நீரில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்தால், ஆய்வகத்தில் உள்ள சிறப்பு சாதனம் மூலம் அதை துல்லியமாக அளவிட வேண்டும்.

Please follow and like us:

You May Also Like

More From Author