பிரமோஸ் ஏவுகணையின் சோதனை வெற்றி!

Estimated read time 1 min read

இந்திய ராணுவத்தின் ‘ரைசிங் சன்’ பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக  சோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் இந்திய கடற்படைக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

உலகின் மிகப்பெரிய ராணுவம் என்ற வரிசையில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. ஆசியாவை பொறுத்த அளவில் இந்திய ராணுவம் இரண்டாவது பெரிய ராணுவமாக இருக்கிறது. எனவே ஒவ்வொரு நாளும் புதியதாக ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றன.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ரைசிங் சன்’ பிரமோஸ் ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இது நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில் ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரமோஸ் வகை ஏவுகணைகள் இந்திய ராணுவத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து இந்த ஏவுகணையை வடிவமைத்தன. ஆனால், தற்போது இந்தியா தனித்தன்மையுடன் இதனை உற்பத்தி செய்து வருகிறது.

அதிலும் குறிப்பாக மணிக்கு 3000 கி.மீ வேகத்தில் சீறி பாயும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணைகளுக்கு சர்வதேச நாடுகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இன்று ‘ரைசிங் சன்’ பிரமோஸ் ஏவுகணையை இந்தியா அந்தமான் நிகோபர் தீவு பகுதியில் வெற்றிகரமாக இன்று சோதனை செய்திருக்கிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் இது பயணிக்கும் என்றும் சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author