கோடை வெயில் : அயோத்தி ஸ்ரீ ராமருக்கு பருத்தி ஆடை !

Estimated read time 1 min read

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், அயோத்தி குழந்தை ராமருக்குப் பருத்தியால் ஆன உடை அணிவிக்கப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா கடந்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. பாரதப் பிரதமர் மோடி பூஜைகள் செய்து குழந்தை ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்து வைத்தார்.

மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் வெப்பம் அதிகரித்து வருகிறது.  இதனால் அயோத்தி குழந்தை ராமருக்கு பருத்தியால் ஆன உடை அணிவிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கோடை காலம் தொடங்கியுள்ளதால்  பகவான் ஸ்ரீ ராமர் இனி பருத்தியால் ஆன வஸ்திரம் அணிவார்.

இந்த வஸ்திரம் பருத்தியால் தயாரிக்கப்பட்ட கைத்தறி வஸ்திரம், அதேபோல் ஆடையில் இயற்கை இண்டிகோ சாயம் பூசப்பட்டு, பூக்கள் அணிவிக்கப்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளது.

Considering the arrival of the summer season and the rising temperatures, starting today, Bhagwan Shri Ramlala will be wearing cotton vastra.

The vastra that Prabhu is wearing today, is made of handloom cotton malmal, dyed with natural indigo, and adorned with gotta flowers.… pic.twitter.com/BtDyzQXYgp

— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) March 30, 2024

Please follow and like us:

You May Also Like

More From Author