மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

Estimated read time 0 min read

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே பழமை வாய்ந்த கூடலழகர் பெருமாள் கோவில் உள்ளது 108 திவ்ய தேசங்களில் 47வது கோவிலாக இது விளங்குகின்றது.

இந்த கோயிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு மேல் ஆனதையொட்டி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு கோயில் திருப்பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.இந்த நிலையில் ஜனவரி 21ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் 17ம் தேதி காலை 10.15 மணியளவில் வாஸ்து சாந்தி மற்றும் யாகசாலை பூஜைகள் தொடங்குயது.மாலையில் முதல் கால யாகசாலை பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து 18ம் தேதி காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 4 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும், 19ஆம் தேதி காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜையும், மாலை 4 மணிக்கு ஐந்தாம் கால பூஜையும், இருபதாம் தேதி காலை 6:00 மணிக்கு ஆறாம் கால பூஜையும், இரவு 10 மணிக்கு ஏழாம் கால பூஜையும் நடந்தது. இந்த நிலையில் இன்று காலை
4 மணிக்கு எட்டாம் கால பூஜையும், காலை 7 மணிக்கு ஸ்ரீ தேவி, பூதேவி, சமய சுந்தரராஜ பெருமாள் யாகசாலையில் இருந்து புறப்பாடு யாத்ரா தானம் யாகசாலையில் இருந்து கடம்புறம் பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இன்று காலை 8. 45 மணிக்கு மேல் 9 மணிக்குள் கோவிலில் உள்ள அனைத்து விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவிந்தா கோசம் முழங்க கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதை அடுத்து ஸ்ரீதேவி, பூதேவி, கூடல் அழகர் பெருமாள் கோவில், மதுரவல்லி தாயார், ஆண்டாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு கருட சேவை புறப்பாடும் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடல் அழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று கூடல் அழகர் பெருமாளை தரிசித்துச் சென்றனர்…. செய்தியாளர் வி காளமேகம்

Please follow and like us:

You May Also Like

More From Author