மார்கழி உற்சவம்

Estimated read time 1 min read

ஸ்ரீவைகுந்தத்தில் ஆயிரங்கால் மண்டபமும், அதன் நடுவில் திருமாமணி மண்டபமும் உள்ளன. ஸ்ரீ மந் நாராயணன் தமது தேவியரோடும், தமது அடியார்களான நித்யசூரிகளுடனும் அந்த திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி இருக்கின்றார்.

108 திவ்ய தேசங்களில் பரமபதம் எனப்படும் இதுவே 108-வது திவ்ய தேசம் ஆகும்.
ஸ்ரீவைகுந்தத்தில் உள்ளது போலவே திருவரங்கத்திலும்
ஆயிரங்கால் மண்டபமும், அதன் நடுவில் திருமாமணி மண்டபமும் உள்ளன. தற்போது நடைபெற்று வரும் இராப்பத்து உற்சவத்தில் தினமும் மதியம் இங்கு சுவாமி நம்பெருமாள் எழுந்தருள்வார்.

ஆழ்வார், ஆச்சார்யர்கள் நடுவில் அரையர்களின் திருவாய்மொழி விண்ணப்பத்தை தினமும் கேட்டு அனுபவிப்பார் படம. மார்கழி உற்சவம் தவிர மற்ற நாட்களில் இதனை சேவிக்க முடியாது.

Please follow and like us:

You May Also Like

More From Author