இந்தியாவில் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Estimated read time 1 min read

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1 ஆயிரத்து 389 ஆக உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் முதல் ஜே.என்.1 எனும் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. கடந்த மாதம் அதிகத்த கொரோனா பாதிப்பு, இந்த மாதம் குறையத் தொடங்கி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், காலை 8 மணி நிலவரப்படி நாட்டில் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை, 1 ஆயிரத்து 389 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா பாதிப்பில் இருந்து 157 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 44 இலட்சத்து 90 ஆயிரத்து 609 பேர் மீண்டுள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 43 பேருக்கும், கர்நாடகாவில் 26 பேருக்கும், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் தற்போது வரை 220 கோடியே 67 இலட்சத்து 85 ஆயிரத்து 749 டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author