இம்பால் ஒய் – 12706 போர் கப்பல் நாளை கடற்படையில் இணைப்பு!

Estimated read time 0 min read

நாளை கடற்படையில் இம்பால் ஒய் – 12706 போர் கப்பல் கடற்படையில் முறைப்படி இணைக்கப்பட உள்ளது.

இந்திய கடற்படையின் மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் ரகசியமாக ஊடுருவும் ஸ்டெல்த் தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் கட்டமைக்கப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல் பணியில் ஈடுபடுவதற்கு தயார் நிலையில் உள்ளது.  நாளை இந்தக் கப்பலை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிகழ்வின் மூலம் மொத்தம் உள்ள நான்கு ‘விசாகப்பட்டினம் கிளாஸ்’ அழித்தொழிப்பு போர்க் கப்பல்களில் மூன்றாவது கப்பல் நாளை மறுநாள் கடற்படையில் முறையாக இணைக்கப்பட உள்ளது.

இந்தப் போர்க்கப்பல் முழுக்க, முழுக்க இந்தியக் கடற்படையின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டது. இந்த வடிவமைப்பின் அடிப்படையில் மும்பையின் மசாகன் டாக் நிறுவனத்தின் மூலம் கப்பல் கட்டப்பட்டது.

குறிப்பாக, வடகிழக்கு  நகரமான இம்பால் என  பெயரிடப்பட்ட முதல் போர்க்கப்பல் இதுவாகும். இதற்கான ஒப்புதல் 2019  ஏப்ரல் 16 அன்று குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது. வடகிழக்கு பிராந்தியத்தின் தேசிய பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் செழிப்பின் முக்கியத்துவத்தை இந்தப் பெயர் சுட்டிக்காட்டுகிறது.

துறைமுகத்திலும் கடலிலும் கடுமையான மற்றும் விரிவான சோதனை திட்டத்தை முடித்த பின்னர் 20 அக்டோபர் 2023 அன்று இம்பால் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இந்தக் கப்பல் 2023 நவம்பரில், நீட்டிக்கப்பட்ட தூர சூப்பர்சோனிக் பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது, இது எந்தவொரு உள்நாட்டு போர்க்கப்பலுக்கும் முதல் முறையாகும்.

இதன் மூலம் போர் செயல்திறன் மற்றும் அதன் அதிநவீன உள்நாட்டு ஆயுதங்கள் மற்றும் தளங்களில் கடற்படையின் உந்துதல் மற்றும் நம்பிக்கையை இந்தக் கப்பல் நிரூபித்துள்ளது.

இந்த மைல்கல் சாதனையைத் தொடர்ந்து, கப்பலின் சின்னம் 2023 நவம்பர் 28 அன்று புதுதில்லியில் மணிப்பூர் முதலமைச்சர் மற்றும் பிற மூத்த பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. ஐ.என்.எஸ். இம்பால் தொடங்கப்பட்டவுடன், மேற்கு கடற்படை கட்டளையில் இணைக்கப்படும்.

இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவால் வடிவமைக்கப்பட்டு, எம்.எஸ்.எம்.இ மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்ளிட்ட பொது மற்றும் தனியார் துறைகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுடன் எம்.டி.எல் உருவாக்கிய ஒரு அதிநவீன போர்க்கப்பல் இம்பால் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author