உலகளாவிய பாரதப் போக்குவரத்து வாகனக் கண்காட்சி! – பிரதமர் மோடி

Estimated read time 1 min read

இந்தியாவின் முதலாவது, உலகளாவிய பாரதப் போக்குவரத்து வாகனக் கண்காட்சியை பிரதமர் மோடி திறந்து வைத்து உரையாற்றுகிறார்.

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 2 அன்று மாலை 4:30 மணிக்கு நடைபெறும் இந்தியாவின் முதலாவது மிகப்பெரிய, உலகளாவிய பாரதப் போக்குவரத்து வாகனக் கண்காட்சி 2024-ல் திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

போக்குவரத்து வாகனங்கள் உற்பத்தியில் இந்தியாவின் திறன்களை இக்கண்காட்சி வெளிப்படுத்தும். இதில் கண்காட்சிகள், மாநாடுகள், வாங்குவோர் விற்போர் சந்திப்புகள், மாநில அரசுகளின் சார்பிலான அமர்வுகள், சாலைப் பாதுகாப்பு அரங்குகள், கோ-கார்ட்டிங் எனப்படும் கார் பந்தயம் போன்றவை இடம்பெறும்.

50-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 800 கண்காட்சியாளர்களுடன், அதிநவீன தொழில்நுட்பங்கள், நீடித்தத் தீர்வுகள், போக்குவரத்து வாகன உற்பத்தியில் உள்ள முன்னேற்றம் ஆகியவற்றை இக்கண்காட்சி முன்னிலைப்படுத்தும்.

இதில் 28-க்கும் அதிகமான வாகன உற்பத்தியாளர்களும், 600-க்கும் அதிகமான வாகன உதிரிபாக உற்பத்தியாளர்களும் பங்கேற்கின்றனர். 13-க்கும் அதிகமான உலகளாவிய சந்தைகளில் இருந்து 1000-க்கும் அதிகமான  நிறுவனங்கள் இந்த நிகழ்வில் தங்கள் தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள், சேவைகளைக் காட்சிப்படுத்தும்.

மாநிலங்கள் தங்கள் பிராந்தியங்களில் உள்ள போக்குவரத்து வாகன உற்பத்திப் பங்களிப்பை விளக்கும் வகையில் மாநில அரசுகளின் அமர்வுகளும் இக்கண்காட்சியில் இடம் பெறுகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author