குடியரசுத் தலைவர் குஜராத் பயணம்!

Estimated read time 1 min read

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார்.

ஆர்ய சமாஜத்தின் நிறுவனர் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று மோர்பி மாவட்டத்தில் உள்ள அவரது பிறந்த இடமான தங்கராவில் நடைபெறுகிறது. இதில் குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார். பின்னர் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமானோர் திரண்டிருக்கும் ஆர்ய சமாஜ உறுப்பினர்களிடம் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார்.

சூரத்தில் உள்ள சர்தார் வல்லபாய் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (SVNIT) 20வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் இன்று கலந்து கொள்கிறார். இந்த பட்டமளிப்பு விழாவில் 1,434 மாணவர்கள் பட்டங்களைப் பெறுவதுடன், 28 மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் தங்கப் பதக்கங்களை வழங்குவார்.

நாளை, வல்சாத் மாவட்டத்தில் உள்ள தரம்பூரில் உள்ள ஸ்ரீமத் ராஜ்சந்திரா ஆசிரமத்திற்கு குடியரசுத் தலைவர் செல்ல உள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author