கேரள பாஜக மாநிலத் துணைத் தலைவராக நடிகர் தேவன் நியமனம்!

Estimated read time 0 min read

தென்னிந்திய நடிகரும் அரசியல்வாதியுமான நடிகர் தேவன் கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1985 ஆம் ஆண்டு மலையாளத்தில் தயாரிப்பாளராக அறிமுகமாகி, பின்னர் நடிகராக உருவெடுத்து தற்போது அரசியல்வாதியாகத் திகழ்பவர் தான் தேவன்.

இவர் தென்னிந்திய மொழிகளிலேயே 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் பிரதாப் படத்தில் அறிமுகமான இவர் ஜெய்ஹிந்த், பாட்ஷா, உல்லாசம், நெஞ்சினிலே, சிட்டிசன், ஏகன், இமைக்கா நொடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு கேரள மக்கள் இயக்கம் என்கிற கட்சியைத் துவங்கித் தேர்தல்களில் போட்டியிட்டு வந்தார். பின், 2021 முதல் தன் கட்சியைக் கேரள மாநில பாஜகவுடன் இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன், கட்சியின் மாநில துணைத் தலைவராகத் தேவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறார்.

இதுவரை தேவன் இருமுறை சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author