சீனாவில் சில இடங்களின் பெயர்களை மாற்றினால் அது எங்களுடையதாகுமா? – ராஜ்நாத் சிங் கேள்வி

Estimated read time 0 min read

இந்தியா தனது அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்ல உறவைப் பேண விரும்புகிறது, ஆனால் யாராவது நமது சுயமரியாதையை புண்படுத்த முயன்றால், இன்றைய இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வலிமை உள்ளது” என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தில் சில இடங்களின் பெயரை சீனா மாற்றுவது குறித்து வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெய்ஜிங்கிற்கு ஒரு பெரிய கேள்வியை எழுப்பினார். சீனாவில் உள்ள சில இடங்களின் பெயரை இந்தியா மாற்றினால், அது நம்முடையதாக மாறுமா என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.

அருணாச்சல கிழக்குத் தொகுதியில் நாம்சாய் என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,

எல்லையோர கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பாஜக தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

“இது எங்கள் வீடு, சமீபத்தில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மூன்று இடங்களுக்கு ‘மறுபெயரிட்டு’ சீனா தனது இணையதளத்தில் வெளியிட்டது. பெயர்களை மாற்றுவதால் எதையும் சாதிக்க முடியாது என்பதை நம் அண்டை வீட்டாரிடம் சொல்ல விரும்புகிறேன்.

நாளை சீனாவில் உள்ள மாநிலங்களில் சில இடங்களின் பெயர்களை மாற்றினால், அவற்றை எங்களுடையதாக ஆகுமா? சீனா இந்த தவறை செய்யக்கூடாது” என்று தெரிவித்தார்.

இதுபோன்ற செயல்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என நான் நினைக்கிறேன். இந்தியா தனது அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேண விரும்புகிறது. எங்கள் சுயமரியாதையை புண்படுத்தினால், இன்றைய இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வலிமை உள்ளது,” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ், மத்தியில் பாஜக தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஏராளமான நிலங்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறினார். இப்பகுதியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டை சுட்டிக்காட்டியவர், வடகிழக்கில் பிரதமர் மோடியின் கவனம் செலுத்துவதற்கு இது சான்றாகும் என்றார்.

இந்தியாவின் நிலத்தை இப்போது யாரும் எடுக்க முடியாது, நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். காங்கிரஸின் தவறுகளைச் சரிசெய்து எல்லைக் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளோம்.

எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்களை காங்கிரஸ் கடைசி கிராமங்கள் என்று அழைத்தது, ஆனால் நாங்கள் நாட்டின் முதல் கிராமங்கள் என்று சொல்கிறோம். நாங்கள் கிராமங்களை வேகமாக வளர்ச்சி அடைய செய்து வருகிறோம், எல்லையோர கிராமங்கள் மேம்பட்டால் மட்டுமே, எல்லைகளை பாதுகாக்க முடியும் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author