ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவு : உயிர்சேதம் தவிர்ப்பு!

Estimated read time 0 min read

ஜம்மு காஷ்மீரில் உள்ள சோனாமார்க் மலைப் பிரதேசத்தில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் எவ்வித உயிர்சேதமும், பொருள் சேதமும் இல்லை

ஜம்மு காஷ்மீரில் உள்ள சோனாமார்க் மலைப் பிரதேசத்தில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. மத்திய காஷ்மீரில் உள்ள கந்தர்பால் மாவட்டத்தில் அமைந்துள்ள சோனாமார்க்கில் உள்ள பால்டால் பகுதிக்கு அருகே பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

ஹாங்கில் சிறிய அளவிலும் சர்பலில் பெரிய அளவிலும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பனிச்சரிவில் எந்தவித உயிர்சேதமும், பொருள் சேதமும் இல்லை என ஜம்மு காஷ்மீர் பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக, ஜம்மு காஷ்மீர் பேரிடர் மேலாண்மை ஆணையம் திங்கள்கிழமை பல மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுத்திருந்தது.

பந்திபூர், பாரமுல்லா மற்றும் குப்வாரா பகுதிகளில் 2,400 மீட்டருக்கு மேல் குறைந்த அபாய நிலை கொண்ட பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜம்மு காஷ்மீர் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தோடா, கிஷ்த்வார், பூஞ்ச், ரம்பன் மற்றும் கந்தர்பால் மாவட்டங்களில் 2,200 மீட்டருக்கு மேல் நடுத்தர அபாய நிலை கொண்ட பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஜம்மு காஷ்மீர் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது .

இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், பனிச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author