தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Estimated read time 1 min read

கடந்த 8-ஆம் தேதி தனது ஒளிப்பரப்பைத் தொடங்கிய தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில், மருதம் மல்டிமீடியா லிமிடெட் சார்பில் , “தமிழ் ஜனம் தொலைக்காட்சி” ஒளிபரப்பைத் தொடங்கியதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.  தமிழ் ஜனம் தொலைக்காட்சி தொடர்புடைய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்த நிறுவனம் தரமான தகவல்களைத் தருவதோடு, வரும் ஆண்டுகளில் பத்திரிகையின் மிக உயர்ந்த இலட்சியங்களை நிலைநிறுத்தட்டும்.

ஜனம் தமிழ் தொலைக்காட்சியின் முயற்சிகள் தமிழகத்தின் சமூக-கலாச்சார மற்றும் ஜனநாயக கட்டமைப்பை வலுப்படுத்துவதற்குப் பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன்.

“தமிழ் ஜனம் தொலைக்காட்சி” ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சிகள், தமிழகம் மட்டுமல்லாதது நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும்.

இந்த முயற்சி வெற்றியடைய “தமிழ் ஜனம் ” தொலைக்காட்சி குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author