தீவிரவாதிகள் அண்டை நாடுகளுக்கு சென்றாலும் விட்டு வைக்க மாட்டோம் : ராஜ்நாத்சிங்

Estimated read time 1 min read

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகள் அண்டை நாடுகளுக்கு சென்றாலும் அவர்களை விட்டு வைக்க மாட்டோம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை குறிவைத்து படுகொலை செய்ததன் பின்னணியில் இந்தியாவின் ரா (RAW)உளவு அமைப்பு இருப்பதாக கார்டியன் தெரிவித்திருந்தது. இந்தியாவுக்கு விரோதமாக கருதுபவர்களை குறிவைக்கும் கொள்கையை டெல்லி செயல்படுத்தியுள்ளது என்றும், இஸ்ரேலின் மொசாட் மற்றும் ரஷ்யாவின் கேஜிபியில் இருந்து உத்வேகம் பெற்ற புல்வாமா தாக்குதலால் ராவின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி அளித்துள்ளார். அதில், அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணவே இந்தியா எப்போதும் விரும்புகிறது.

ஆனால், இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத சதித் செயல்களை ஊக்குவிக்குவிப்பர்களை விட்டு வைக்க மாட்டோம் என தெரிவித்தார்.

இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு பாகிஸ்தானுக்கு தப்பி சென்றாலும் அவர்களை அழிக்க அந்த நாட்டிற்குள் நுழைவோம். பாரதத்திற்கு எதிரான தீவிரவாதம், வெளிநாடுகளிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

எந்த நாட்டின் நிலப்பரப்பையும் இந்தியா ஆக்கிரமித்தது இல்லை. அதேபோல் இந்தியாவின் எந்த பகுதியையும் ஆக்கிரமிக்க விட மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியா எப்போதும் தனது அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேண விரும்புகிறது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதம் வெளிநாட்டு மண்ணிலும் ஒழிக்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்றும், பாரதத்துடன் இருப்பதை அந்த மக்கள் விரும்புவதாகவும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author