நாடாளுமன்ற தேர்தலில் 8,360 வேட்பாளர்கள் போட்டி!

Estimated read time 1 min read

1996-ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அதிகபட்சமாக தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் 8 ஆயிரத்து 360 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது.

மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் 5 கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில் 6-ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே.25-ஆம் தேதியும், 7-ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூன் 1-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் களம் காணும் வேட்பாளர்களின் எண்ணிக்கை விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதில், நடைபெற்று வரும் தேர்தலில் மொத்தம் 8 ஆயிரத்து 360 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாகவும், இது 1996 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிகபட்ச எண்ணிக்கை என்றும் கூறியுள்ளது.

மேலும், 1996 -ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 13 ஆயிரத்து 952 பேர் களம் கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author