நிர்மலா சீதாராமன் – 6வது முறையாக பட்ஜெட் தாக்கல்!

Estimated read time 1 min read

நாட்டின் முழுநேர முதல் பெண் நிதியமைச்சர் என்ற சாதனையை ஏற்கனவே படைத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போது 6வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் ச‍ெய்வதன் மூலம், முன்னாள் பிரதமர் & நிதியமைச்சர் மொரார்ஜி தேசாயின் சாதனையை சமன் செய்துள்ளார்.

இன்று தாக்கல் செய்யப்படுவது ஒரு இடைக்கால பட்ஜெட் ஆகும்.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், ஜவகர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி அமைச்சரவைகளில் நிதியமைச்சராக பணியாற்றியவர்.

இவர், மொத்தம் 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்து, இந்தியாவில் மிக அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற சாதனையைப் படைத்திருந்தார்.

இவருக்கு அடுத்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், யஷ்வந்த் சின்கா, ப.சிதம்பரம், அருண் ஜெட்லி ஆகியோர் 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்த சாதனையை செய்திருந்தனர்.

கடந்த 2023 பட்ஜெட் தாக்கலின்போது இந்த சாதனையை சமன் செய்திருந்த நிர்மலா, தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதன் மூலம், மேற்கூறிய 4 பேரையும் முந்தி, மொரார்ஜியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author