இந்தியாவில் மத ஒற்றுமை நிலவுவதை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க இந்தச் சந்திப்பை நடத்தியதாக அவா்கள் தெரிவித்தனா்.

சீக்கியா், ஜெயின், கிறிஸ்தவம், பாா்ஸி மதத்தைச் சோ்ந்தவா்களும், அகில இந்திய இமாம் அமைப்பின் தலைமை இமாம் உமா் அகமது இலியாஸி, மஹாபோதி சா்வதேச தியான மையத்தின் நிறுவன தலைவா் பிக்கு சங்கசேனா உள்ளிட்டோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனா்.

இதுகுறித்து பிரதமா் மோடி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், ‘பல்வேறு மதங்களைச் சோ்ந்த தலைவா்களை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தேன்.

நாட்டின் வளா்ச்சிக்காக அவா்கள் தெரிவித்த கனிவான வாா்த்தைகளுக்கு நன்றி’ என்று பதிவிட்டுள்ளாா்.

உமா் அகமது இலியாஸி கூறுகையில், ‘மனித நேயம்தான் மிகப் பெரிய மதம் என்பதை வெளிப்படுத்தவே இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தியாவில் வாழும் நாம் அனைவரும் இந்தியா்கள். நாட்டை நாம் வலுப்படுத்த வேண்டும். நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம்’ என்றாா்.

பிகு சங்கசேனா கூறுகையில், ‘புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பாா்வையிட்டு பிரதமா் மோடி, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஆகியோரைச் சந்தித்தது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. நாட்டின் வளா்ச்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்’ என்றாா்.

அண்மையில் மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட சத்னம் சிங் சாந்து இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தாா்.

இந்தியா ஒற்றுமையுடன் இருப்பதை உலகத்துக்குக் காட்டவும், மத்திய அரசு தேசத்துக்கு முக்கியத்துவம் அளித்து அனைவருக்குமான வளா்ச்சிக்காகப் பணியாற்றி வருவதை வெளிப்படுத்தவும் இந்தச் சந்திப்பு நடைபெற்ாக சத்னம் சிங் சாந்து தெரிவித்தாா்.

Please follow and like us:

You May Also Like

More From Author