பூடான் அரசின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி!

Estimated read time 1 min read

பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான Order of the Druk Gyalpo விருது வழங்கப்பட்டது.

இரு நாள் பயணமாக பிரதமர் மோடி  பூடான் சென்றுள்ளார். பாரோ விமானம் நிலையத்தில் பூடான் பிரதமர் டிஷெரிங் டோப்கே பிரதமர் மோடியை வரவேற்றார்.இதனைத்தொடர்ந்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பள்ளி சிறுவர், சிறுமிகள் இந்தியா, பூடான் தேசிய கொடிகளை அசைத்தபடி வரவேற்பு அளித்தனர்.

பின்னர் திம்புவில் உள்ள தாஷிச்சோ ட்சாங் அரண்மனையில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். முன்னதாக அங்கு நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து பூடான் அரசர் 4-வது ட்ருக் கியால்போ  பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ (‘Order of the Druk Gyalpo) விருதை அளித்தனர்.

இந்தியா-பூடான் உறவின் வளர்ச்சியில் பிரமதர் மோடி சிறந்த பங்களிப்பிற்காகவும், பூடான் தேசத்திற்கும் ,மக்களுக்கும் அவர் செய்த சிறப்பான சேவைக்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author