மத்திய அரசு, தமிழகதத்திற்கு நிவாரணம் வழங்குவதை எந்த வகையிலும் தாமதப்படுத்தவோ, மறந்துவிடவோ இல்லை! – நிர்மலா சீதாராமன்

Estimated read time 1 min read

தமிழகத்திற்கு மாநில பேரிடர் மீட்பு நிதியின் மத்திய பங்கின் இரண்டாவது தவணை ரூ. 450 கோடியும் டிசம்பர் 12ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,

தமிழ்நாடு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து டிசம்பர் 18 ஆம் தேதி, தேசிய பேரிடர் மீட்புப் படையின் மொத்தம் 10 மீட்புக் குழுக்கள் தென் தமிழகத்திற்காக அனுப்பப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் 8 குழுக்கள், திருநெல்வேலி மாவட்டத்திற்கு 2 குழுக்கள் . சென்னை மண்டல மீட்பு மையத்தில் ஒரு குழு, இப்போதும் அரக்கோணம் தலைமையகத்தில் இரண்டு அணிகள் தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு மொத்தம் 13 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் தமிழகத்தில் உள்ளன. 8 ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டு, கூடுதல் ஹெலிகாப்டர்களும் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்திய கடலோர காவல்படையின் ஒரு கப்பல் மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களுடன், அங்கு நிலைநிறுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி வருகிறது.

19 மீட்புக் குழுக்கள் அந்த நான்கு மாவட்டங்களிலும் உள்ளன. இதில் ராணுவம் -2, கடலோர காவல்படை – 7, தேசிய பேரிடர் மீட்புப் படை -10. மேலும், 2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டிற்கான மாநில பேரிடர் மீட்பு நிதி (SDRF) ரூ. 1,200 கோடி, இதில் ரூ.900 கோடி மத்திய அரசின் பங்காகும். மாநில அரசின் அறிக்கையின்படி, ஏப்ரல் 1, 2023 நிலவரப்படி, மாநில பேரிடர் மீட்பு நிதி கணக்கில் உள்ள இருப்பு ரூ.813.15 கோடி. நடப்பு 2023-24 ஆம் ஆண்டிற்கான மாநில பேரிடர் மீட்பு நிதியின் மத்திய பங்கான ரூ.450 கோடியின் முதல் தவணை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவது தவணையாக ரூ. 450 கோடியும் 2023 டிசம்பர் 12ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு , சரியான நேரத்தில் நிவாரணம் வழங்குவதை எந்த வகையிலும் தாமதப்படுத்தவோ அல்லது மறந்துவிடவோ இல்லை எனத் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author