ரூ.8 லட்சம் கோடி சந்தை மூலதனத்துடன் எலைட் கிளப்பில் நுழைந்தது SBI

Estimated read time 1 min read

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின்(SBI) சந்தை மூலதனம் ரூ.8 லட்சம் கோடியைத் தாண்டியதை அடுத்து, அது மதிப்புமிக்க இந்திய நிறுவனங்களின் வரிசையில் சேர்ந்துள்ளது.
இன்று காலை வர்த்தகத்தில் 8.3% வரை ஏற்றம் கண்ட எஸ்பிஐ பங்குகள், மும்பை பங்குச் சந்தையில்(பிஎஸ்இ) அதிகபட்சமாக ₹900.15 ஐ எட்டியது.
2021ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் எஸ்பிஐயின் பங்குகள் இவ்வளவு உயர்ந்துள்ளன.
இது எஸ்பிஐ வங்கியின் சிறந்த செயல்திறனைப் பிரதிபலிக்கிறது.

இந்த ஆண்டு மட்டும் எஸ்பிஐயின் பங்கு விலைகள் 40% உயர்ந்துள்ளது.
இதற்கு முன் 6 இந்திய நிறுவனங்கள் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளன. எனவே, இந்த சந்தை மூலதன மைல்கல்லை எட்டிய மற்ற ஆறு இந்திய நிறுவனங்களுடன் எஸ்பிஐயும் தற்போது சேர்ந்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author