விவசாயிகளுக்கு உதவும் உடான் திட்டம் பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க….!!!

Estimated read time 0 min read

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் விளை பொருட்களின் மதிப்பை மேம்படுத்தும் விதமாக வேளாண் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு விவசாயிகளுக்கு உதவுவதற்காக சர்வதேச மற்றும் தேசிய வழித்தடங்களில் 2020 ஆம் வருடத்தின் ஆகஸ்ட் மாதம் வேளாண் உடன் திட்டம் தொடங்கப்பட்டது.

வேளாண் உடன் திட்டம் 2.0 கடந்த 2021 ஆம் வருடம் அக்டோபர் 27ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டது. மலைப்பகுதியில் வடகிழக்கு மாநிலங்கள் பழங்குடி பகுதிகளிலிருந்து அழுகும் உணவு பொருட்களை கொண்டு செல்வதில் அதிக கவனம் செலுத்துவது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.

இந்த திட்டம் 25 விமான நிலையங்களையும், பிற பிராந்தியங்கள் பகுதிகளில் உள்ள 33 மாநிலங்களையும் உள்ளடக்கியது.

இந்த திட்டம் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, மீன்வளத்துறை உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், வர்த்தகத்துறை பழங்குடியினர் நல அமைச்சகம், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் போன்ற எட்டு அமைச்சர்கள் மற்றும் துறைகள் தங்களுடைய தற்போது திட்டங்களை பயன்படுத்தி வேளாண் விளை பொருட்களை கொண்டு செல்வதற்கான தடவாளங்களை வலுப்படுத்தும் ஒருங்கிணைப்பு திட்டமாகும்.

வான்வழி போக்குவரத்தின் மூலமாக வேளாண் பொருட்களின் விநியோகத்தை எளிதாக்குவதற்கும் இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் பாதுகாப்பு அமைச்சரத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்களில் சரக்குகள் தரையிறக்கும் கட்டணம் நிறுத்தும் கட்டணம் போன்றவை இந்த திட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர், திருச்சி ஆகிய 2 விமான நிலையங்களும் விவசாயிகளுக்கு இந்த சேவை வழங்குகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author