விவசாயிகள் பேரணியை தடுக்க அரியானா அரசு நடவடிக்கை

Estimated read time 1 min read

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணி நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த பேரணி வருகிற செவ்வாய்க்கிழமை நடக்கிறது. இந்த பேரணி அரியானாவில் இருந்து பஞ்சாப் வழியாக டெல்லிக்கு செல்ல இருக்கிறது.

இதனால் அரியானாவில் இருந்து விவசாயிகள் டிராக்டர்களில் பஞ்சாப் செல்ல முடியாத அளவிற்கு ஹரியானா அரசு சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி வருகிறது.

அத்துடன் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎஃப் போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. குரூப்பாக மெசேஜ் அனுப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது.

#WATCH | Haryana | Barricading by Police and local administration being done, security being enhanced in Ambala in view of farmers’ call for march to Delhi, scheduled for 13th February. pic.twitter.com/zeo2pFFrlE

— ANI (@ANI) February 10, 2024

Please follow and like us:

You May Also Like

More From Author