1643 கிலோமீட்டர் நீளமுள்ள இந்திய-மியான்மர் எல்லை முழுவதும் வேலி! – அமித் ஷா

Estimated read time 1 min read

1643 கிலோமீட்டர் நீளமுள்ள இந்திய-மியான்மர் எல்லை முழுவதும் வேலி அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சிறந்த கண்காணிப்பை எளிதாக்கும் வகையில் எல்லையில் ரோந்துப் பாதை அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

1,643 கிமீ நீளமுள்ள இந்தியா-மியான்மர் எல்லையில் வசிக்கும் மக்கள் எந்த ஆவணமும் இல்லாமல் இருநாட்டிலும் 16 கிமீ தூரம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மியான்மர் எல்லை முழுவதும் மின்வேலி அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

மோடி அரசு ஊடுருவ முடியாத எல்லைகளை உருவாக்க உறுதிபூண்டுள்ளது. 1643 கிலோமீட்டர் நீளமுள்ள இந்திய-மியான்மர் எல்லை முழுவதும் வேலி அமைக்க முடிவு செய்துள்ளது. சிறந்த கண்காணிப்பை எளிதாக்கும் வகையில், எல்லையில் ரோந்துப் பாதையும் அமைக்கப்படும்.

The Modi government is committed to building impenetrable borders.

It has decided to construct a fence along the entire 1643-kilometer-long Indo-Myanmar border. To facilitate better surveillance, a patrol track along the border will also be paved.
Out of the total border length,…

— Amit Shah (@AmitShah) February 6, 2024

மொத்த எல்லை நீளத்தில், மணிப்பூரில் உள்ள மோரேயில் 10 கிமீ நீளம் ஏற்கனவே வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கலப்பின கண்காணிப்பு அமைப்பு (HSS) மூலம் வேலி அமைக்கும் இரண்டு பைலட் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மணிப்பூரில் தலா 1 கிமீ நீளத்துக்கு வேலி அமைக்கப்படும். மேலும், மணிப்பூரில் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு வேலி அமைக்கும் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, விரைவில் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author