2029இல் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்!

Estimated read time 0 min read

2029 ஆம் ஆண்டில் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது.

2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 68 கோடியாக இருக்கும் என்று எஸ்பிஐ அறிக்கை கணித்துள்ளது, அதில் பெண் வாக்காளர்கள் 33 கோடியாக இருக்கலாம் (49%) என கணிக்கப்பட்டுள்ளது.

2029 ஆம் ஆண்டில் , 37 கோடி பெண் வாக்காளர்கள் இருப்பார்கள் என்றும், ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 36 கோடியாக இருக்கும் என அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும் 2047ல் பெண்களின் வாக்குப்பதிவு 55% ஆகவும், ஆண்களின் வாக்குப்பதிவு 45% ஆகவும் குறையும் என்று கணித்துள்ளது. கடந்த ஒரு தசாப்தத்தில் இந்தியாவின் அரசியல் அரங்கில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது.

மேலும் 2047ல் பெண்களின் வாக்குப்பதிவு 55% ஆகவும், ஆண்களின் வாக்குப்பதிவு 45% ஆகவும் குறையும் என்று கணித்துள்ளது. 1951 ஆம் ஆண் தேர்தலில் எட்டு கோடி பேர் வாக்களித்தனர். 2009 தேர்தலில்  42 கோடி பேர் வாக்களித்தனர், இதில் 19 கோடி பேர் பெண்கள்.

2014ஆம் ஆண்டில் , வாக்காளர்களின் எண்ணிக்கை 13.7 கோடி அதிகரித்து 55 கோடியாக இருந்தது, அதில் 26 கோடி  பேர் பெண்கள். 2019 மக்களவைத் தேர்தலில் ஆண்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. 2019 பொதுத் தேர்தலில் 67.01% ஆண்களுக்கு மாறாக 67.18% பெண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author