5-வது கட்டத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது!

Estimated read time 1 min read

5-வது கட்ட மக்களவைத் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதுவரை 4 கட்டமாக 96 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

இதனையடுத்து, வரும் 20-ம் தேதி 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில், 5-வது கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது.

5-வது கட்ட தேர்தலில், மொத்தம் 695 வேட்பாளர்கள் களம் காணும் நிலையில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 264 பேரும், மிக குறைவாக லடாக்கில் 3 பேரும் போட்டியிடுகின்றனர்.

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி, பியூஷ் கோயல் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட 695 பேர் களம் காணுகின்றனர்.

இந்நிலையில் 5-வது கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author