கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா

Estimated read time 0 min read

வந்தவாசி, டிச 16:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழ்ப் பணி ஆற்றி வரும் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் எங்கே போயின மரவட்டைகள்…! ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா ரோட்டரி சங்க அரங்கத்தில் நடைபெற்றது.
வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க துணைச் செயலாளர் கவிஞர் தமிழ்ராசா எழுதிய எங்கே போயின மரவட்டைகள் கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா தலைமை தாங்கினார். செயலாளர் எம்.பி‌. வெங்கடேசன் வரவேற்றார்.
திமுக வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்‌. தரணிவேந்தன் பங்கேற்று ஹைக்கூ கவிதை நூலை வெளியிட, ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ்‌. குமார் பெற்றுக் கொண்டார். நூல் பற்றிய தொடக்கவுரையை தமிழ்ச் சங்க ஆலோசகர் கவிஞர் மு. முருகேஷ் வாசித்தார். மேலும் நூல் குறித்து அரிமா சங்க தலைவர் இரா. சரவணன், தொழிலதிபர் அ.ஜா.இஷாக், ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இறுதியில் நூலாசிரியர் கவிஞர் தமிழ்ராசா ஏற்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் வந்தவாசியின் முக்கிய பிரமுகர்கள், தமிழ்ச் சங்க நிர்வாகிகள், பல்வேறு சமூக ஆர்வலர்கள், ஊடகத்துறை நண்பர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று நூல் பிரதிகளை பெற்று வாழ்த்தினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author