அண்டார்டிகாவில் ஆயிரக்கணக்கான பென்குயின்கள் இறப்பு

Estimated read time 1 min read

கடந்த பிப்ரவரியில் அண்டார்டிகாவின் முதல் H5N1 வழக்கு பதிவாகியுள்ளது.
இது அச்சுறுத்தப்பட்ட பெங்குவின் இனங்களை அழிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் ஃபெடரேஷன் யுனிவர்சிட்டியின் அறிக்கையின்படி, கடந்த மாதம் நடைபெற்ற ஒரு விஞ்ஞானப் பயணத்தில், குறைந்தது 532 இறந்த அடெலி பென்குயின் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், ஆராய்ச்சியாளர்கள் அதன் காரணத்தை தற்போது கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.

அங்கே இன்னும் பல்லாயிரக்கணக்கான பென்குவின்கள் இறந்திருக்க கூடும் எனவும் சந்தேகின்றனர்.
இந்த சம்பவம் சமூக ஆர்வலர்களை சற்று அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

கொடிய H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் பெங்குவின்களைக் கொன்றதாக ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கும் நிலையில் கள சோதனைகள் முடிவுகளுக்காக காத்திருப்பதாக என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author