அமைதி மற்றும் நல்லிணக்கம் என்ற கோட்பாட்டைப் பின்பற்றும் சீன நாகரிகம்

Estimated read time 0 min read

செவ்வியல் மேற்கோள்கள், சீன நாகரிகத்தின் முக்கிய எடுத்துக்காட்டாகவும், இன்றைய சீனாவை அறிந்து கொள்வதற்கான சிறந்த ஜன்னலாகவும் விளங்குகிறது.

செவ்வியல் மேற்கோள்களில் புதிய சிந்தனைகள் எனும் தொடர் நிகழ்ச்சியில், சீன நாகரிகத்தின் தொடர்ச்சி,புதுமையாக்கம், ஒற்றுமை, உள்ளடக்கம் மற்றும் அமைதி ஆகியவை விவரிக்கப்படெகின்றன.
சீன நாகரிகம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்குரிய பின்னணி காரணம் என்ன?

அமைதியான உலகத்தை உருவாக்குவதற்கு மனிதகுலம் ஏற்க வேண்டிய பொறுப்புகள் என்ன? இன்றைய புதிய நிகழ்ச்சியில் ஹாங்ஜோ நகரில் பயணம் மேற்கொண்டு ஃபுடான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஃபை தொங்டொங்குடன் சீன நாகரிகத்தின் அமைதி குறித்து விவாதிக்கலாம்.


சீன நாகரிகத்தின் முக்கியக் கோட்பாடுகளான அமைதி, நட்பு, இணக்கம் உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்க உள்ளேன். கன்பூசியஸ் தனது நூலில் “லி” மற்றும் “ஹெ” பற்றி முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார். “லி” என்பது சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட பொருள்களையும், “ஹெ” என்பது ஒருங்கிணைப்பு மற்றும் இணக்கம் உள்ளிட்ட பொருள்களையும் வெளிப்படுத்துகிறது என்று ஃபுடன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பைய் டொங்டொங் சுட்டிக்காட்டினார்.


பாரம்பரிய சீனாவின் வரலாற்றைப் பார்த்தால், சீனர்கள் வெளிப்புற தாக்கங்களை திறந்த மனதுடன் வரவேற்றுள்ளனர். அதற்கு, கன்பியூசியனிசம் முக்கியமானது என்று நினைக்கிறேன். கன்பியூசியனிச உள்ளடக்கத்தின் மிக எளிய அடையாளம் என்னவென்றால் கன்பியூசியன் என்ற சொல். அதனை ஓர் அடைமொழியாகக் கூட பயனப்டுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.


தனக்குத்தான் என்ற சிந்தனை கொண்டிருந்தாலும் பரவாயில்லை. அதேசமயம் மற்றவர்கள், மற்ற நாட்டவர்கள் என அனைவரும் மனிதர்களே என்பது தான் கன்பியூசியன் சிந்தனை. அனைவர் மீதும் இரக்கம் கொள்ள வேண்டும், மற்றவர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் பைய் டொங்டொங் குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author