உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் என அழைக்கப்படும் “ஐகான் ஆப் தி சீஸ் “

Estimated read time 1 min read

உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலான ராயல் கரீபியனின் “ஐகான் ஆஃப் தி சீஸ்”, தனது முதல் பயணத்தை ஜனவரி 27 அன்று சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாக மியாமி துறைமுகத்தில் இருந்து தொடங்கியது. ஏறக்குறைய 1,200-அடி நீளமும் 250,800 டன் எடையும் கொண்ட கப்பல் பெஹேமோத் அமெரிக்க மாநிலமான புளோரிடாவிலிருந்து தனது முதல் ஏழு நாள் தீவு பயணத்திற்காக வெப்ப மண்டலங்கள் வழியாக புறப்பட்டது.

இந்த கப்பல் ஃபின்லாந்தின் துர்குவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் 900 நாட்களுக்கும் மேலாக கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கப்பல் .மேலும் இது ஈபிள் கோபுரத்தின் உயரத்தை விட நீளமானது மற்றும் 20 தளங்கள், 8,000 பயணிகள் – 7,600 விருந்தினர்கள், 2,350 பணியாளர்கள் பயணிக்கும் வசதி கொண்டது.

உலகில் இதுவரை இல்லாத அம்சங்கங்கள் கொண்ட கப்பலாக இது பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 17,000-சதுர-அடி நீர் பூங்கா, இது தற்போது கடலில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பூங்காவாகும். சாதனை படைத்த அம்சங்களை இந்த பயணக்கப்பல் கொண்டுள்ளது; அடுத்ததாக கடலில் முதல் (கேன்டிலீவர்) மேலோட்டமான முடிவில்லா மிகப்பெரிய நீச்சல் குளம், மற்றும் மிகப்பெரிய பனி அரங்கம்.

பஹாமாஸில் பதிவுசெய்யப்பட்ட இந்த கப்பலில் 40க்கும் மேற்பட்ட உணவு விடுதிகள் மற்றும் மதுபான கடைகள் மற்றும் கடலில் மிகப்பெரிய 16 ஆர்கெஸ்ட்ரா கருவிகள் மற்றும் 50 இசைக்கலைஞர்கள் உள்ளன . கூடுதலாக, ஐகான் ஆஃப் தி சீஸில் ஆறு நீர்ச்சறுக்குகள், ஏழு நீச்சல் குளங்கள், ஒரு பனிச்சறுக்கு வளையம் மற்றும் ஒரு தியேட்டர் ஆகியவை இதில் அடங்கும்.

மேலும் இதில் பயணிக்க 2 பில்லியன் டாலர் செலவாகும் . சில சிறிய பயணக் கப்பல்களைக் காட்டிலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இந்த கப்பல் அமையும் என கூறுகின்றன .

அர்ஜென்டினாவின் கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி இந்த கப்பலுக்கு ஜனவரி 23 அன்று அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டினார்.

கடலில் பயணிக்கும் பயணிகளின் பயணத்தை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றுவதற்கான சின்னச் சின்ன அம்சங்களால் இந்த கப்பல் நிறைந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க இந்த கப்பல் குறித்து விமர்சனங்களும் பலவகையில் எழுந்துள்ளன.

சுற்றுச்சூழல் கொள்கை சிந்தனைக் குழுவான, தூய்மையான போக்குவரத்துக்கான சர்வதேச கவுன்சிலின் (ICCT) கடல் திட்டத்தின் இயக்குனர் பிரையன் காமர் இது குறித்து கூறியதாவது

பாரம்பரிய கடல் எரிபொருளை விட மிகவும் சுத்தமாக எரியும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (எல்என்ஜி) இயங்கும் வகையில் கட்டப்பட்டதால் இந்த கப்பல் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இது மீத்தேன் உமிழ்வுகளுக்கு அதிக ஆபத்துகளை ஏற்படுத்துகிறது.

எனவே, கப்பலின் இயந்திரங்களில் இருந்து மீத்தேன் கசிவு ஏற்படுவது குறித்து சுற்றுச்சூழல் குழுக்கள் கேள்வியெழுப்பியுள்ளது, மேலும் இது காலநிலைக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்து என்றும் கூறியுள்ளது.

குறிப்பாக மீத்தேன், ஒரு கிரகத்தை வெப்பமாக்கும் வாயு, இது கார்பன் டை ஆக்சைடை விட 20 ஆண்டுகளில் 80 மடங்கு மோசமாக உள்ளது. மேலும் அத்தகைய உமிழ்வைக் குறைப்பது புவி வெப்பநிலை வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தாமல் இருக்க முக்கியமானது ஆகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author