ஐ.நா தலைமையகத்தில் சீன வசந்த விழா கொண்டாட்டம்

Estimated read time 0 min read

சீனாவின் வசந்த விழாவை முன்னிட்டு, ஐ.நா தலைமையகத்தில் பணி புரியும் சீனப் பணியாளர்கள் வசந்த விழா கொண்டாட்டத்தை நடத்தினர். ஐ.நாவின் உயர் நிலை அலுவலர்கள், ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதிகள் ஆகியோர் இக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.


ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி சாங் ஜுன் இந்நிகழ்வில் கூறுகையில், டிராகனின் எழுச்சி, ஐ.நா மற்றும் சர்வதேச சமூகத்துக்கு வலுவான இயக்கு ஆற்றலை உட்புகுத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

மேலதிக ஒற்றுமை மற்றும் வலிமையுடன், மனித குல எதிர்கால பொது சமூகத்தை கையோடு கைகோர்த்து உருவாக்கி, மேலும் அருமையான உலகத்தை கட்டியமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


உலகளாவிய தகவல் தொடர்புத் துறையின் துணை தலைமைச் செயலாளர் ஃப்லேமிங் இந்நிகழ்வில் ஐ.நா மற்றும் பலதரப்புவாதத்துக்கு சீனா அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.


இந்நிகழ்வில் டிராகன் நடனம், பீக்கிங் இசை நாடகம், பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பாரம்பரிய சீன உணவு வகைகள் வழங்கப்பட்டன.

Please follow and like us:

You May Also Like

More From Author