காசா பகுதி மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலை அடுத்து ட்ரெண்ட் ஆகும் ”All Eyes on Rafah”

Estimated read time 1 min read

தெற்கு காசா நகரத்தின் மீது இஸ்ரேல் ஒரு பெரிய தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அந்த நகரத்தில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக பல லட்சம் பேர் சமூக வளைத்தளங்களில் குரல் கொடுத்துள்ளனர்.
நேற்று உலகம் முழுவதிலுமிருந்து பலர் ”All Eyes on Rafah” என்ற வாசகத்தை சமூக ஊடங்களில் பதிவிட்டு பாலஸ்தீனியர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
சமீபத்தில் தெற்கு காசா நகரத்தில் உள்ள ஒரு கூடார முகாமில் தங்கி இருந்த 45 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இருந்து இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியத்திற்கும் இடையே நடந்து வரும் போரில் இதுவரை 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author