சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியைத்துரிப்படுத்தும் 3820 இலக்குகள் திட்டம்

Estimated read time 0 min read

1993ஆம் ஆண்டில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஃபூ ட்சொ நகராட்சி கமிட்டி செயலாளராக இருந்த ஷிச்சின்பிங், ஃபூ ட்சொ நகரின் 20ஆண்டுகால சமூக மற்றும் பொருளாதார உத்திகளின் உருவாக்கப் பணிக்குத் தலைமைத் தாங்கினார்.

மூன்று ஆண்டுகாலம், 8ஆண்டுகாலம், 20ஆண்டுகாலம் என மூன்று கட்டங்களில் ஃபூ ட்சொ நகரின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி பற்றிய இலக்குகள், செயல்முறை, முக்கிய கடமைகள் முதலியவை இந்த உத்திகளில் முறையாக வகுக்கப்பட்டன. தற்போது, 3820 எனப்படும் இந்த உத்திகளுக்கு, இன்னும் நடைமுறை ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

ஃபூ ட்சொ நகருக்குச் சொந்தமான கடற்பரப்பு 11ஆயிரம் சதுர கிலோமீட்டர் ஆகும். இது, இந்நகரின் நிலப்பகுதிக்கு சுமார் சமமாகும். இந்நிலைமையில், பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் பார்வையை தரையிலிருந்து கடல் மேல் பட வேண்டும் என்று 3820 உத்திகளில் குறிப்பிடப்பட்டது.

தொடர்ந்து, கடல் வழி போக்குவரத்து, துறைமுகம் அருகிலுள்ள தொழில்துறை முதலியவை சிறப்பாக வளர்ந்து வருகின்றன. கடல் உயிரின மருந்துகள், கடல் பகுதியிலுள்ள காற்று ஆற்றல் மின்சார சாதனத் தயாரிப்பு போன்ற புதிதாக வளர்ச்சியடையும் தொழில்துறைகளும் பெரிதும் வளர்ந்து வருகின்றன.

மேலும், கடலோரப் பகுதியில் பாரம்பரிய வழிமுறையில் வளர்ப்புத் தொழில், நுண்ணறிவு உபகாரணங்களால் தூரக் கடற்பரப்பில் வளர்கின்றது. 2022ஆம் ஆண்டு வரை, ஃபூ ட்சொ நகரில் மொத்த கடல் உற்பத்தி மதிப்பு 33000கோடி யுவானைத் தாண்டியது. இது தொடர்ந்து நாடு முழுவதிலும் முன்னணியில் இருக்கின்றது.

Please follow and like us:

You May Also Like

More From Author