கருப்பூர் கலம்காரி துணி ஓவியக் கலையைப் பார்த்த அண்ணாமலை!

Estimated read time 1 min read

அழிந்து வரும் கலையான கருப்பூர் கலம்காரி துணி ஓவியக் கலையைப் பாதுகாத்து வரும் அனைத்துக் கலைஞர்களைத்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டி உள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

சுமார் 400 ஆண்டுகள் தொன்மையான, சிக்கல்நாயக்கன்பேட்டையில், கருப்பூர் கலம்காரி துணி ஓவியக் கலையைப் பாதுகாத்து வரும் கலைஞர்களில் ஒருவரான திரு E.ராஜ்மோகன் அவர்களை தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் அவர்களுடன் சந்தித்ததில் மகிழ்ச்சி.

மூலிகை வண்ணங்களைக் கொண்டு, திருவிளையாடல் புராணம், ராமாயண காவியங்கள், அரசவை காட்சிகள் என பல்வேறு கலைநயங்களை வெறும் கைகளால் துணிகளில் வரைவது தான் இந்த கலையின் தனித்துவம் ஆகும்.

இன்றைய தினம், சுமார் 400 ஆண்டுகள் தொன்மையான, சிக்கல்நாயக்கன்பேட்டையில், கருப்பூர் கலம்காரி துணி ஓவியக் கலையைப் பாதுகாத்து வரும் கலைஞர்களில் ஒருவரான திரு E.ராஜ்மோகன் அவர்களை @BJP4TamilNadu மாநில பொதுச் செயலாளர் திரு @KaruppuMBJP அவர்களுடன் சந்தித்ததில் மகிழ்ச்சி.

மூலிகை… pic.twitter.com/nHybdhmVkB

— K.Annamalai (@annamalai_k) January 24, 2024

உலகப் புகழ் வாய்ந்த கருப்பூர் கலம்காரி துணி ஓவியங்களுக்கு, நமது மத்திய அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கியது. இதனை முன்னெடுத்தவர்களில் ராஜ்மோகன் மற்றும் அவரது தந்தை டாக்டர் எம்பெருமாள் ஆகியோர் முக்கியமானவர்கள்.

அழிந்து வரும் கலையான கருப்பூர் கலம்காரி துணி ஓவியக் கலையைப் பாதுகாத்து வரும் அனைத்துக் கலைஞர்களுக்கும் தமிழக பாஜக சார்பாக நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Please follow and like us:

You May Also Like

More From Author