ஜப்பானில் விமானம் தீப்பிடித்து விபத்து – 300க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்..!!

Estimated read time 1 min read

ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தீப்பிடித்து எரிந்தது.

ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று  ஒன்று டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானம் மீது மோதியதில் தீப்பிடித்தது. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் மற்றொரு விமானத்துடன் மோதியதில் தீ பிடித்தது. ஏர்பஸ் கடலோர காவல்படை விமானத்துடன் மோதியதாக தொலைக்காட்சி அறிக்கைகள் தெரிவித்தன. ஹொக்கேடோ நகரில் இருந்து டோக்கியோவில் தரையிறங்கும்போது விபத்து ஏற்பட்டுள்ளது..

அதாவது 300க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த விமானம் கடலோர காவல் படை விமானத்தின் மீது மோதியது. விமானத்தில் இருந்த பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 300-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த விமானம் கடலோர காவல் படை விமானத்தின் மீது மோதியதால் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. பயணிகள் விமானத்தில் பற்றிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விமானத்தில் இருந்த 379 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவருமே வெளியேற்றப்பட்டதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Japan airlines plane on fire at Haneda Airport Tokyo. pic.twitter.com/3TZfxHVZkR

— Taurus4ShoTimeFella (@Atacms_4_Ukr) January 2, 2024

JAL plane on fire at Tokyo Airport
pic.twitter.com/EL9s7kVJbi

— アトリン (@phoojux) January 2, 2024

Please follow and like us:

You May Also Like

More From Author