ஜெர்மனி சர்வதேச பொம்மை கண்காட்சி : விற்று தீர்ந்த இந்திய பொம்மைகள்!

Estimated read time 1 min read

ஜெர்மனியின் நியூரம்பெர்க் சர்வதேச பொம்மை கண்காட்சியில் இந்திய பொம்மை தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய விற்பனை கிடைத்துள்ளன.

ஜெர்மனியின் நியூரம்பெர்க்கில் ஐந்து நாள் சர்வதேச பொம்மைக் கண்காட்சி நடைபெற்றது. ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெற்றது.

இந்த சர்வதேச பொம்மைக் கண்காட்சியில் இந்தியர்களும் பங்கேற்றனர். இந்நிலையில் இந்திய பொம்மை தயாரிப்பாளர்கள், உயர்தர தயாரிப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தியதால் 10 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்பில் விற்பனை விற்பனை செய்துள்ளனர்.

கட்டாய தர விதிமுறைகள், சுங்க வரி அதிகரிப்பு, பொம்மைகள் மீதான தேசிய செயல் திட்டம் போன்ற அரசின் முயற்சிகள் உயர்தர தயாரிப்புகளை உற்பத்தி செய்ய உதவியுள்ளன. அவை சர்வதேச அரங்கில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன என்பதை இந்திய பொம்மைத் தயாரிப்பு எடுத்துக்காட்டுகிறது.

இந்திய பொம்மையில் மிகவும் பிரபலமான, மர பொம்மைகள், கல்வி கற்பது போன்ற பொம்மைகள் இடம் பெற்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து பொம்பைகளை வாங்குபவர்கள் இந்திய பொம்மைகளை வாங்க ஆர்வம் காட்டி அதிக எண்ணிக்கையிலான பொம்மைகளை வாங்கியதாக பொம்மை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு நடைபெற்றக் கண்காட்சியில் இந்தியாவிலிருந்து 55-க்கும் அதிகமான ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர். ‘மேட் இன் இந்தியா’ பொம்மைகளுக்கு வளர்ந்து வரும் சர்வதேச அங்கீகாரம், ஏற்றுமதி அதிகரிப்புக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கண்காட்சியில் 65-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 2,000 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author