துபாயில் தொழில்துறை வளர்ச்சிக்கு 50 கோடி திட்டம்

Estimated read time 1 min read

தொழில் துறையின் வளர்ச்சிக்காக சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 கோடி ரூபாய் நிதியுதவி திட்டம் துபாயில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முயற்சியை துபாய் பட்டத்து இளவரசரும் நிர்வாக சபையின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அறிவித்தார்.

துபாய் அரசாங்கம் மற்றும் எமிரேட்ஸ் NBD ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் மூலம் இந்த முயற்சி உருவாக்கப்பட்டது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஆதரிப்பதும், அவற்றின் வளர்ச்சி மற்றும் உலகளாவிய விரிவாக்கத்தை விரைவுபடுத்துவதும் இதன் நோக்கம் என்று ஷேக் ஹம்தான் கூறினார்.

எமிரேட்டைத் தங்கள் வணிகத் தளமாகத் தேர்ந்தெடுத்த அனைத்து தொழில்முனைவோர்களும் வலுவாக ஆதரிக்கப்படுவார்கள். எமிரேட்டின் வெற்றிக்கு தொழில்முனைவோர் முக்கிய பங்களிப்பாளர்கள் என்றும், துபாய் பொருளாதார நிகழ்ச்சி நிரலின் (டி33) இலக்குகளை அடைவதற்கு தொழில்முனைவோரின் பங்கேற்பு அவசியம் என்றும் அவர் X இல் குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author