நோபல் பரிசு பெற்ற ‘கடவுள் துகள்’ இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ் 94 வயதில் காலமானார்

Estimated read time 1 min read

நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ், தனது 94 வயதில் காலமானதாக எடின்பர்க் பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
பீட்டர் ஹிக்ஸ், பிரபஞ்சத்தில் கண்டறியப்படாத துகள் பற்றிய கோட்பாடு அறிவியலை மாற்றியமைத்த முன்னோடி ஆவார்.
அவர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக பேராசிரியாராக பணிபுரிந்தார்.
கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக நோய்வாய்பட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக திங்களன்று அவரது இல்லத்திலேயே அவரது உயிர் பிரிந்தது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு ஜெனீவாவிற்கு அருகிலுள்ள CERN ஆராய்ச்சி மையத்தில் வெளியான ஹிக்ஸ்-ன் கண்டுபிடிப்பு, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவின் மிகப்பெரிய முன்னேற்றம் என்று பரவலாகப் பாராட்டப்பட்டது.
அது ஒரு காலத்தில் அறிவியல் புனைகதைகளாக இருந்த கருத்துக்களை மாற்றியமைத்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author