வெளிநாடு வாழ் தமிழர்களின் பொங்கல் கொண்டாட்டம்!

Estimated read time 0 min read

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை எந்த அளவிற்கு உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறதோ, அதேபோல வெளிநாடுகளில் உள்ள தமிழர்களாலும் பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தை மாதம் முதல் நாள் அன்று உலகிற்கு வெளிச்சம் கொடுத்து விளைச்சலுக்கு உறுதுணை புரியும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புது பானையில் பொங்கல் வைத்து, பொங்கி வரும் அழகைப் பார்த்து ரசித்து, குடும்பத்துடன் சேர்ந்து பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமாக கூறி, வெல்லம் கலந்து நெய் ஊற்றி சூரியனுக்கு படையலிட்டு வழிபடுவார்கள் தமிழர்கள். மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகளை வழங்கி, வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்வர்.

நவீன கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால், தமிழர்கள், தங்களின் சொந்த ஊர்களை விட்டு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்து வருகின்றனர்.

தமிழர்கள் எங்கு சென்றாலும், தங்களுடைய கலாச்சார பாரம்பரியங்களைக் கைவிடுவது இல்லை. அதேபோல பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட மறப்பதும் இல்லை. அந்த வகையில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஆப்பிரிக்கா, டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஆசியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பொங்கல் பண்டிகை சிறப்பாகவும், வெகு விமரிசையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர்களுடன் இணைந்து மற்ற நாட்டினரும் பொங்கல் பண்டிகையினைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author