வெளிநாட்டுக்கான சீன மருத்துவ உதவி குழுவின் சாதனை

சீனா வெளிநாடுகளுக்கு மருத்துவ உதவிக் குழுவை அனுப்பும் 60ஆவது ஆண்டு நிறைவு மற்றும் பாராட்டு மாநாடு 29ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், இம்மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளைச் சந்தித்து, அவர்களுக்கு வாழ்த்துக்களையும், வெளிநாடுகளுக்கு மருத்துவ உதவி அளிக்கும் பணியாளர்களுக்கு வணக்கத்தையும் தெரிவித்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் துணை தலைமை அமைச்சருமான லியு கோச்சுங் இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,
வெளிநாடுகளுக்கான மருத்துவ உதவியில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி உயர்வாக கவனம் செலுத்தி வருகின்றது. இப்பணியில் எட்டப்பட்ட சாதனைகளை ஷி ச்சின்பிங் உயர்வாகப் பாராட்டினார்.

கடந்த 60 ஆண்டுகளாக மருத்துவ உதவிக் குழுக்கள், உள்ளூர் பொது மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை அளித்து வருகின்றன. இதற்கு இந்த நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

புதிய யுகத்திலும் புதிய பயணத்திலும், சீன தனிச்சிறப்புடைய சோஷலிச சமூகம் பற்றிய ஷி ச்சின்பிங்கின் சிந்தனையை வழிக்காட்டலாக கொண்டு, மனிதகுலத்தின் ஆரோக்கியமான எதிர்கால பொது சமூகத்தைக் கட்டியமைப்பதற்குப் பங்காற்ற வேண்டும் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author