கொந்தளிப்பான உலகில் சீனாவின் பங்கு

Estimated read time 1 min read

சர்வதேச செல்வாக்கு, புத்தாக்கத் தலைமை ஆற்றல் மற்றும் தார்மீக ஆற்றல் கொண்ட பெரிய நாடாகச் சீனா விளங்கி வருவதாக 27, 28ஆம் நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன மத்திய கமிட்டி வெளிவிவகாரப் பணிக் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உலக அமைதியை உருவாக்குபவர்
பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதலை எடுத்துக்காட்டாகக் கொண்டு, இரு நாட்டுத் தீர்வு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மோதலைத் தீர்ப்பதற்கான ஒன்றே அடிப்படை வழிமுறையாகுமென சீனா பலமுறை வலியுறுத்தியுள்ளது.


பாலஸ்தீனம்-இஸ்ரேல் பிரச்சினைக்கான 2712ஆம் இலக்க தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படச் சீனா முன்னெடுத்துள்ளது. மேலும், பாலஸ்தீனப் பகுதிக்கு மனித நேய நிவாரண உதவியையும் சீனா வழங்கியுள்ளது.


மார்ச் மாதத்தில், சீனா, சௌதி அரேபியா, ஈரான் ஆகிய மூன்று தரப்புகள் பெய்ஜிங்கில் “பெய்ஜிங் உடன்படிக்கை”யை உருவாக்கியுள்ளன.

இந்த உடன்படிக்கையின் படி, சௌதி அரேபியாவும், ஈரானும் தூதாண்மையுறவை மீண்டும் துவங்குவதற்கு ஒப்புக்கொண்டன. இதற்குப் பின்பு தான், கத்தார் உள்ளிட்ட நாடுகளுடன் பஹ்ரைன் தூதாண்மையுறவை மீண்டும் தொடங்கியது, 12ஆண்டுகளுக்குப் பின் அரபு நாடுகள் லீக்கிற்குச் சிரியா மீண்டும் திரும்பியது, துருக்கி-எகிப்து உறவுகள் மேம்பாடு அடைந்துள்ளது.


உலக வளர்ச்சியின் பங்களிப்பாளர்
இவ்வாண்டு உலகப் பொருளாதாரத்தின் மீட்சி தொடர்ந்து மந்தமான நிலையில் சிக்கிக்கொண்டுள்ளது. அதன் பின்னணியில், சீனப் பொருளாதாரம் சீரான திசைக்கு வளர்ந்து வருகிறது. முதல் மூன்று காலாண்டில், சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 5.2விழுக்காடு அதிகமாகும்.

உலகப் பொருளாதார வளர்ச்சியின் மிகப் பெரிய உந்து ஆற்றலாகச் சீனா விளங்குகின்றது.
தவிரவும், ஐ.நாவின் 28ஆவது காலநிலை உச்சிமாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளை ஈட்டியுள்ளது.

பல்வேறு நிகழ்ச்சி நிரல்களின் கலந்தாய்வில் சீனத் தரப்பு ஆழமாகப் பங்கேற்று ஆக்கப்பூர்வமான சாதனைகளைப் பெறுவதற்கு முக்கிய பங்களிப்பு ஆற்றியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author