ஜல்லிக்கட்டில் கலக்கும் காளைகள் சாபம் பெற்றதா?

Estimated read time 0 min read

தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை, தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் வெளி நாடுகளிலும் பல பெயர்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகை வெறும் கொண்டாட்டம் மட்டும் அல்லாமல்ல, வழிபாட்டைத் தாண்டி அது சில புராணத்துடன் தொடர்புடையதாக உள்ளது.

அறுவடைத் திருவிழா தை முதல் நாளில் தொடங்குகிறது. எனவே இதை தைப் பொங்கல் என்று அழைக்கப்படுகிறத. இந்த பொங்கல் கொண்டாட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 13 முதல் 16ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. போகி, பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், பொங்கல் பண்டிகையை நான்கு நாட்கள் கொண்டாடுகிறோரம்.

இந்நிலையில், மாட்டுப் பொங்கல் இரண்டு புராணங்களுடன் தொடர்புடையதாக உள்ளது.

பயிர்கள் செழிப்பாக வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் மாதம். அறுவடை செய்யும் விதமாகவும், பயிர் செய்ய உதவிய சூரிய கடவுள், மழை, விவசாயத்திற்கு உதவிய கால்நடைகள் மற்றும் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த பொங்கல் கொண்டாட்டம் பாரம்பரியங்களுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறைந்தது 2000 ஆண்டுகளாவது தொன்மையானது என நம்பப்படுகிறது.

இந்திரனுக்கு பசுக்கள் மூலம் பாடம் புகட்டிய கிருஷ்ணர்

கிருஷ்ண அவதாரத்தின் போது, அனைத்து தெய்வங்களை விட மிகவும் ஆணவமிகுந்தவராக இந்திரன் விளங்கினார். அவருக்கு பாடம் புகட்ட கிருஷ்ணர், கிராமத்தில் உள்ள அனைத்து மாடு மேய்ப்பவர்களையும் இந்திரனை வணங்குவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். கோபமடைந்த அவர், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய தனது மேகங்களை அனுப்பினார்.

அதனால் கிரமமே வெள்ளத்தில் மூழ்கியது. அதிலிருந்து அனைத்து உயிரினங்களையும், கிராம மக்களைக் காப்பாற்றக் கிருஷ்ணர் தனது சுண்டு விரலால் கோவர்த்தன மலையைத் தூக்கி காத்தருளினார்.

இந்திரன் தனது தவறை உணர்ந்து, பகவான் கிருஷ்ணரின் சக்தியை புரிந்து கொண்டான். இந்த சம்பவத்திற்கு பின்னர், கிருஷ்ணர் விஸ்வகர்மாவை அழைத்து, மீண்டும் துவாரகாவை அமைத்து மக்களை குடியமர்த்தும் படி கேட்டார். துவாரகையில் குடியேறிய பின்னர் மக்கள் தங்கள் பசுக்கள், காளைகளுடன் விவசாயம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.

சாபம் பெற்ற காளை :

மற்றொரு கதையின்படி, ஒரு சமயம் சிவபெருமான் தனது காளையை பூலோகத்திற்கு அனுப்பி சிவ பக்தரான பசவேஸ்வரரிடம் சென்று மனிதர்களை தினமும் எண்ணெய் தேய்த்து குளித்து, மாதம் ஒரு முறை மட்டுமே உணவு உண்ணும்படி கேட்டுக் கொண்டார்.

ஆனால் காளையோ அதை தற்செயலாக எதிர்மறையாகக் கூறிவிட்டார். அதையே பசவேஸ்வர் போதிக்க ஆரம்பித்தார். இதனால் கோபமடைந்த சிவபெருமான் காளை செய்த தவறுக்கு, நீ என்றென்றும் பூமியில் சென்று வாழும்படி சபித்தார்.

மேலும் விவசாயிகளுக்கு அதிக உணவு விளைவிக்க வயல்களை உழுவதற்கும், அவர்களுக்கு பயன்படும்படியாக வாழ காளையைக் கைலாயத்திலிருந்து விரட்டியடித்தார். அன்றிலிருந்து காளைகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author