தீண்டாதே தீயவை

Estimated read time 1 min read

Web team

IMG-20240513-WA0053.jpg

தீண்டாதே தீயவை !

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, !

வாழ்த்துரை : ” பொற்றாமரை கொண்டான் ”
மருத்துவர் ஏ.ஆர். சீனிவாசன் M.D. ,

ஏ.ஆர். மருத்துவமனை, மதுரை-625 020.

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளுதெரு, தி.நகர்,
சென்னை – 17.
தொலைபேசி : 044 2434 2810. பக்கம் : 60, விலை : ரூ.50.

******.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். (குறள் 202, அதிகாரம் 21 : தீவினை அச்சம்)

என்றார் வள்ளுவப் பெருந்தகை.

அவர் குறளை மெய்ப்பிக்கும் வகையில் காந்தியடிகளும் ‘கண்ணையும், வாயையும், காதையும்’ பொத்தி தீயவையிலிருந்து தள்ளி நிற்க பயிற்சி அளித்தார்.

அந்த வரிசையில் நமது நண்பர் இரா.இரவி ‘தீண்டாதே தீயவை’ என்ற நூலை வெளியிட்டு, தீயினும் அஞ்சப்படும் தீமைகளிலிருந்து நம்மைக் காத்து, தப்பிக்கும் வழிமுறைகளை கற்பித்து வருகிறார். அவருடைய பணி சிறக்க இயற்கை அவருக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கிட வேண்டுகிறேன்.

உயிரினங்களின் ஓரறிவு முதல் பல அறிவுகளாக பாகுபடுத்தி சிறப்பித்த மனித சமுதாயம், மனிதனை ஆறறிவு படைத்தவன் என்று சிறப்பிக்கின்றது. இயற்கையில் ஆறறிவு தாண்டிய நிலைகளை ஒவ்வொரு சமுதாயமும் ஒவ்வொரு சிறப்பு பெயரிட்டு அழைக்கிறது. இயற்கை என்றும், அல்லா என்றும், ஆண்டவன் என்றும், இயேசு என்றும் சிறப்பு பெயரிட்டு, அந்த ஆறாம் அறிவு அறிவு தாண்டிய நிலைகளை பெயரிட்டு வணங்கி வருகிறது. அந்நிலைத் தாண்டி ஏழாம் அறிவுக்குள் நம் கவனத்தைச் செலுத்தும்போது துயரமற்ற, துன்பம் தவிர்த்த இன்பமான, இனிமையான உணர்வுக்குள் நுழைய முடியும் என்று கருதிய அனுபவசாலிகள் வரிசையில் இரவி அவர்களும் மனித சமுதாயம் துன்பம் தவிர்த்த இன்பமான சூழலில் வாழ வேண்டுமென்று முயற்சி செய்து வருகிறார். அவரது பணி சிறக்க மீண்டும் வாழ்த்து கூறுகிறேன்.

.

Please follow and like us:

You May Also Like

More From Author