பொங்கலும், காணாமல் போன வாழ்த்து அட்டைகளும்!

Estimated read time 0 min read

தமிழர்களின் முக்கியமான அடையாளம் எது என்றால் அது பொங்கல் பண்டிகை. அப்படிப்பட்ட பொங்கல் பண்டிகையின் சிறப்புகளில் மிகவும் முக்கியமாக, இதயங்களை பறிமாறிக் கொள்ளும் வாழ்த்து அட்டைகள்.

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. அதற்கு எற்ப, பொங்கல் பண்டிக்கை முன்பே, வாழ்த்து அட்டை வீடுதேடி வரும். அப்படி வந்தால் தான் பொங்கல் பண்டிகையே வீடி தேடி வந்து கதவை தட்டுவது போல் ஒரு இருக்கும்.

பொங்கல் தொடங்குவதற்கும் பல நாட்கள் முன்னரே, ஒவ்வொரு கடைகளின் வாசல்களில் பொங்கல் வாழ்த்து அட்டைகள் காட்சியளிக்கும். அதில், பொங்கல் பண்டிகை,  இயற்கை காட்சிகள், அதிசய காட்சிகள், அழகு தேவதைகள், நடிகர்கள், நடிகைகள், கடவுள்கள், விளையாட்டு வீரர்கள், என விதவிதமான வாழ்த்துகள் அட்டைகள் குவிந்து கிடக்கும்.

அன்பு நண்பர்களுக்கும், நெருங்கிய உறவுகளுக்கும் பொங்கலுக்கும் சில நாட்கள் முன்னரே வாழ்த்து அட்டைகளை தேர்ந்தெடுத்து, அதில் கவிதை மழையை நனைத்து அத்துடன் கைப்பட வாழ்த்துகள் என எழுதி, நிறைவாக அன்புடன் என்று முடித்து ஸ்டாம்ப் ஒட்டி தபால் பெட்டியில் கொண்டு போடும் போது கிடைக்கும் சுகமே தனி சுகம்தான்.

அதுமட்டுமல்ல, அதே போல பொங்கல் நேரத்தில் தபால்காரர்கள் சுமந்து வரும் வாழ்த்து அட்டைக்காக தவம் இருந்தகாலம் எல்லாம் உண்டு. வாழ்த்து அட்டையை வெறும் வாழ்த்து அட்டையாக பார்க்காமல், அதில், அன்பும், பாசமும் கலந்து அனுப்புவதால், கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள் மனித வாழ்வின் உயர்வுகளுக்கு ஒரு உந்து கோலாக அமைந்தது.

இன்றைய நவீன கம்யூட்டர் யுகத்தில், வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வருகையால் வாழ்த்து அட்டைகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டன. நமது நாட்டில் காணாமல் போன தந்தி, ரேடியோ, கோலிக்குண்டு வரிசையில் பொங்கல் வாழ்த்து அட்டைகளும் காணாமல் போய்விட்டன. இதனை நம்பி சிவகாசியில் இயங்கிய பல அச்சகங்கள் இன்று மூடுவிழா நடத்திவிட்டன.

நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பாலமாக இருந்தது பொங்கல் வாழ்த்து அட்டை என்றால் அது மிகையல்ல.

Please follow and like us:

You May Also Like

More From Author