பொங்கல் : வண்ண கோலங்களின் வரலாறு !

Estimated read time 0 min read

ஜனவரி மாதம் என்றால் உலகத்தில் உள்ள அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது ஆங்கில புத்தாண்டுதான். ஆனால் தமிழர்களுக்கு ஜனவரி மாதம் என்றால் முதலில் நினைவிற்கு வருவது தமிழர்களின் பொங்கல் திருநாள் தான்.

பொங்கல் அன்று பல வண்ணங்களில் புத்தாடை அணிந்து, வண்ண வண்ண கோலமிட்டு கொண்டாடுவோம். மற்ற நாட்களில் வண்ண கோலமிடுவதை விட பொங்கல் அன்று தான் அனைவரின் வீட்டிலும் வண்ண கலர் கொடுத்து கோலமிடுவர்.

பல கிராமங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோலப்போட்டிகளும் கூட வைக்கபடும். மற்ற நாட்களில் பகலில் தான் கோலமிடுவோம். ஆனால் பொங்கல் திருநாளில் தெருவில் உள்ள அனைத்து பெண்களும் தங்களின் வீட்டிற்கு முன்பே இரவிலேயே கோலமிடுவர்.

பல பெண்கள் இப்படி கோலமிடுவதற்காகவே பொங்கலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பர். இப்படி பொங்கல் திருநாளில் கோலத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு.

இந்த கோலங்கள், கம்பிக்கோலம், பாம்புக் கோலம், தாமரைக் கோலம், புள்ளிக் கோலங்கள், நேர்ப்புள்ளிக் கோலங்கள், தொட்டில் கோலம், புள்ளிகளிடையே வரையும் கோலம், ஊடுபுள்ளிக் கோலங்கள் என பல்வேறு வகைகள் உள்ளன.

5 வயதை கடக்கும்போது கோலமிடப் பழகும் சிறுமிகள், 90 வயது முதுமையிலும் தங்களது வீ்ட்டின் முற்றத்தில் ஆர்வத்தோடு கோலமிடுகிறார்கள். ஒரு வீட்டில் தினமும் கோலம் போடுவதால் இந்த இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கு தடையிருக்காது. நன்மைகளும் வந்தடையும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் கோலம் போடும் போது இரட்டை கோடுகளாக கோலம் போடவேண்டும். ஒரு கோடுமட்டும் வரைந்து கோலம் போடுவது அசுபகாரியங்களுக்கு தான் என்கிறது சாஸ்திரம்.

தெற்குதிசை பார்த்தபடி கோலத்தை ஆரம்பிக்கவும் கூடாது – முடிக்கவும் கூடாது. பொதுவாக தெய்வங்களின் சின்னங்களை வீட்டின் வாசலில் கோலமாக போடக்கூடாது. காரணம் அந்த கோலங்களை யாராவது தெரியாமல் மிதித்துவிட்டாலும் பாவம் சேரும் என்றும் கூறப்படுகிறது.

அதிலும் வீட்டின் வாசலில் ரங்கோலி கோலங்கள் போடுவதால் நல்ல எண்ணங்கள் தோன்றுவதாக அனைவராலும் நம்பப்படுகிறது. கோலங்களில் வண்ணமிடுவதால் அந்த கோலம் அழகாக மாறுகிறது. எனினும் அந்த நிறங்கள் மனிதர்களின் எண்ணங்களை குறிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

ஆகவே வண்ண வண்ண கோலமிட்டு இப்பொங்கல் பண்டிகையை வண்ண மையமாக கொண்டாடுவோம்

Please follow and like us:

You May Also Like

More From Author