தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!! 

Estimated read time 0 min read

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் கூடுதலாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில் 19 சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாட்களாக இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஜூலை 13ஆம் தேதி இன்று பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author