மதுரையில் அரசினர் மீனாட்சி கல்லூரி என்.சி.சி. மாணவியருக்குபாராட்டு விழா

Estimated read time 1 min read

மதுரையில் என்.சி.சி. மாணவியர் களான மேனகா மூன்றாம் ஆண்டு வரலாற்றுத் துறை (ஆங்கில வழி) ,லத்திகா மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை ஆகிய இருவரும்,புது தில்லியில் நடைபெற்ற 75வது குடியரசு தின முகாம் அணிவகுப்பில், கடமைப்பாதையில் நடந்து, பி.எம் பேரணியிலும் கலந்து கொண்டு நேற்று கல்லூரிக்குத் திரும்பினர். அவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் சு.வானதி, என்.சி.சி அலுவலர் கேப்டன் முனைவர் ரெ. முத்துசெல்வி, துறைத் தலைவர்கள் மற்றும் என்சிசி மாணவியர் ஆகியோர் பாராட்டி மலர்செண்டுகள் கொடுத்து வரவேற்றனர்.


மதுரை பட்டாலியன் குழுவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்களில் இவர்கள் இருவர் மட்டுமே பெண்கள் பட்டாலியன் மதுரையை சார்ந்தவர்கள். 2021-22 ம் ஆண்டில், நமது மாணவி நாக ஸ்ரீ கிரண் தில்லிக்குச் சென்றார்,

அதன் பிறகு இந்த ஆண்டு இரண்டு மாணவியர் கடுமையான தேர்வு செயல்முறைக்குப் பிறகு தமிழ்நாடு இயக்குநரகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி புது தில்லி சென்று அரசினர் மீனாட்சி கல்லூரிக்கு பெருமை தேடி தந்துள்ளனர்.


இவர்கள் இருவரும் ஜூன் 2023 முதல் பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டனர். அவர்களின் கடமை உணர்வும், கடின உழைப்பும் மற்றும் முன்மாதிரியான அர்ப்பணிப்புத் தன்மையும் தான் நமது கல்லூரிக்கும் பட்டாலியனுக்கும் பெருமையை தேடி தந்துள்ளது.


75வது குடியரசு தினத்தன்று கடமைப்பாதையில் அணிவகுத்துச் சென்ற குழுவில் மேனகாவும், ஜனவரி 28 ம்தேதியன்று புதுதில்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற PM பேரணியில் லத்திகாவும் பங்கேற்றார்.


ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, முதல்வர் வானதி , பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவிகள் அவ்விரு மாணவிகளின் சாதனையை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து பெருமிதம் அடைந்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author