10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது; 91.55% தேர்ச்சி விகிதம்

Estimated read time 1 min read

தமிழகத்தில் இன்று காலை 9:30 மணியளவில், 10ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகின.
இதில் 91.55% மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவிகள் 94.53% தேர்ச்சியும், மாணவர்கள், 88.58% தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.
அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.90 ஆக உள்ளது.
இந்த பொதுத்தேர்வில் குறிப்பாக கணிதத்தில் அதிகபட்சமாக 20,691 பேர் 100/100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
சென்னையில் உள்ள தேர்வு துறை இயக்குனர் அலுவலகம் தேர்வு முடிவுகளை வெளியிட்டுளளது.
அந்த முடிவுகளை, அதை மாணவர்கள் www.tnresults-nic-in, www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய மூன்று இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகம் மட்டுமின்றி புதுவையிலும் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author