12 -ம் வகுப்பு செய்முறை தேர்வு – பிப்.12 -ம் தேதி முதல் தொடக்கம்!

Estimated read time 1 min read

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 12 -ம்  வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பிப்.12 -ம் தேதி தொடங்க உள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு படிக்கும் 10, 11 மற்றும் 12 -ம் வகுப்பு மணவர்களுக்கு, வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வில் குளறுபடிகள் நடைபெறாத வகையில், தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், 10 -ம் வகுப்பு தேர்வு மார்ச் மாதம் இறுதி வாரத்திலும், 11 -ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப். 19 -ம் தேதி முதல் பிப். 24 -ம் தேதி வரையும், 12 -ம் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப். 12 -ம் தேதி முதல் பிப். 17 -ம் தேதி வரையும் நடைபெறும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மேலும், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்குத் தேவையான வரைபடங்கள் உள்ளிட்டவை தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author