அன்புள்ள அம்மா.

Estimated read time 0 min read

Web team

IMG_20240202_145305.jpg

அன்புள்ள அம்மாவுக்கு ! கவிஞர் இரா .இரவி !

உலகில் உறவுகள் ஆயிரம் உண்டு
உன்னத அம்மாவிற்கு ஈடு உண்டோ?
கருவில் சுமந்த காலம் முதல் நம்மை
கண்ணின் இமையாய் காப்பவள் ஒப்பற்ற தாய்
தன் தூக்கம் துறந்து என்றும் குழந்தை
தன் தூக்கம் காத்து வளர்த்தவள் தாய்
தாலாட்டுப் பாடி தமிழ்மொழி ஊட்டியவள் தாய்
சீராட்டி வளர்த்து சிறப்படையச் செய்தவள் தாய்
தன்னலம் மறந்து குழந்தை நலம் பேணுபவள் தாய்
தன்னிகரில்லா தியாகத்தின் திரு உருவச் சின்னம் தாய்
பசி மறந்து குழந்தை பசி போக்குபவள் தாய்
ருசி அறிந்து குழந்தை புசிக்கத் தருபவள் தாய்
தன்னைத் தேய்த்து வாசம் தரும் சந்தனம் தாய்
தன்னை உருக்கி ஒளி தரும் மெழுகு தாய்
சும்மா வந்து போகும் உறவு அல்ல தாய்
அம்மா நெஞ்சில் பதிந்த கல்வெட்டு உறவு தாய்
உடல் உயிர் உள்ள வரை மறக்கமுடியாது தாய்
உணர்வு ஊட்டிய உன்னத உயர்ந்த உறவு தாய்
பேசாத கல்லை வணங்குவது மூடநம்பிக்கை
பேசும் தாயை வணங்குவது தன்னம்பிக்கை
கண்ணிற்கு புலப்படாத கடவுளை வணங்குவதை விட
கண்ணிற்கு புலப்படும் தாயை வணங்கு உயர்ந்திட
மனைவியை மதித்திரு தவறில்லை ஆனால்
அம்மாவை துதித்திடு தவறில்லை சரியே!

Please follow and like us:

You May Also Like

More From Author